Wednesday, December 12, 2012

பெண்கள், சமாதானம், பாதுகாப்பு சம்பந்தமான 1325 வது தீர்மானம்



பென்கள், சமாதானம், பாதுகாப்பு தொடர்பான ஜக்கிய நாடுகள் தீர்மானம் 2001ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ம் திகதி உறுப்பு நாடுகளால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் ஏனைய தீர்மானங்கள் போலல்லாது திணிக்கும் தன்மையற்று வெறுமனே ஓர் ஒப்பந்த ரீதியாக இத்தீர்மானம் காணப்படுவதனால் இதன் அமுலாக்கம் மிகவும் மந்த கதியில் இடம்பெறுவதுடன் பெண்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவேண்டிய இதன் கட்டமைப்பம் செயலற்றுக்காணப்படுகின்றது.

பெண்கள், சமாதானம், பாதுகாப்பு சம்பந்தமான 1325வது தீர்மானமானது ஒரு சட்ட இடைவெளியை பூர்த்திசெய்ய கொண்டுவரப்பட்டதல்ல மாறாக ஏற்கனவே உள்ள மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை பூர்த்தி செய்யும் சட்டத்தொகுதியாகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாகுபாடுகளற்ற சமத்துவமான சமுதாயத்தில் அடிப்படை அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படுவதனூடாக சமூக மற்றும் ஆட்சியலகில் பெண்களது பங்களிப்பை உறுதிப்படுத்துவதே பெண்கள்,சமாதனம்,பாதுகாப்பு சம்பந்தமான 1325வது தீர்மானத்தின் அடிப்படை சித்தாந்தமாகும்

பெண்கள்,சமாதனம்,பாதுகாப்பு சம்பந்தமான 1325வது தீர்மானத்தின் பிரகாரம் தீர்மானமெடுத்தல் மற்றும் ஆட்சிப்பொறிமுயைகளில் பெண்களின் பங்குபரிற்றல் வீத்தினை அதிகரிப்பதனூடாக முரன்பாடுகளை கூடுமாகவரை தவிர்க்க முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது இது சமூக, பொருளாதார, அரசியல் அரங்கில் பெண்களின் வகிபாகத்தை உறுதிப்படுத்துவதற்கான கருத்தேற்பாடாகும்


சமூகத்தில் வழக்காறுகளுக்கூடாக வளர்த்தெடுக்கப்பட்ட “பெண்களுக்கேயான பிரத்தியேக வேலைகள்” ( வீட்டு வேலைகள், குடும்பத்ததை பாராமரித்தல்) என்ற சிந்தனை வட்டம் புரையோடிக்கிடப்பதும், பெண்களுக்கான பொருளாதார சமூக மற்றும் காலாச்சார உரிமைகளின் பயன்பாட்டை தடுக்கும் முகமான சமூக ஏற்பாடுகளுமே பெண்கள்,சமாதனம்,பாதுகாப்பு சம்பந்தமான 1325வது தீர்மானத்தின் அடிப்படை சித்தாந்தத்தை அமுல் படுத்துவதற்கான தடைக்கற்களாக அமையெபப்பெற்றுள்ளன.

1995ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பீஜிங் தீர்மானத்தின் (BEIJING PLATFORM FOR ACTION –BPA)  பிரகாரம் ஏற்கனவே உள்ள சட்டப்பொறிமுறைகளுக்குட்பட்ட பெண்களின் வலுவூட்டத்தை உறுதிசெய்வதற்கான நடவடிக்கையாகவே பெண்கள்,சமாதனம்,பாதுகாப்பு சம்பந்தமான 1325வது தீர்மானம் கொண்டுவரப்பட்டது இதனடிப்படையில் பொருளாதார ரீதியாக ஓரங்கட்டப்படுவதை தடுத்து நிறுத்தல், பாலின ரீதியான பாகுபாட்டினை அது எந்த வடிவில் தோன்றினாலும் இல்லாதொழித்தல் ஆகிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளுக்கூடாக அரசு மற்றும் அரச அமைப்புக்களில் பெண்களின் பங்குபற்றலினை உறுதிப்படுத்துவதே நோக்காகும்.

அண்மய ஆண்வுகளின் படி அரச தீர்மானமெடுத்தலில் பெண்களின் பங்குபற்றுதலினூடாக சுமார் 6% வiரக்குமான முரன்பாடுகளை தவிர்க்க முடியுமென கண்டறியெப்பட்டுள்ளது இது வெறுமனே பெண்களது பங்குபற்றல் என்பது மட்டுமன்றி பீஜிங் தீர்மானத்தின்(BAP) இன் அடிப்படையிலான “ ஆயுத செலவீனங்களை குறைத்தல்” , ஜக்கிய நாடுகள் சபையின் “ வளங்களை பொருளாதார மேம்பாட்டிற்கு மாத்திரம் பயன்னடுத்தல்” (உறுப்புரை 126) ஆகிய நியமங்களை பின்பற்றியதனூடாக அடையெப்பெற்றதாகும்.

பெண்கள்,சமாதனம்,பாதுகாப்பு சம்பந்தமான 1325வது தீர்மானமானது தேசிய சட்ட நிறுவனங்கள் , பிராந்திய மனித உரிமைகள் கண்காணிப்பு பொறிமுறைகள், ஜ.நா மனித உரிமை பேரவை, விசாரணை ஆணைக்குழுக்கள், உடன்பாடுகள், தவணை அடிப்படையிலான அறிக்கைகள், விஷேட அறிக்கைகள் என்பவற்றினூடாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு சர்வதேச ரீதியான முரன்பாடுகளை தவிர்ப்பதற்கான அனைத்து நியமங்களுக்கூடாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது

பெண்கள்,சமாதனம்,பாதுகாப்பு சம்பந்தமான 1325வது தீர்மானத்தின் திட்ட செயல் நெறிமுறை வெற்றியை சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை குறிகாட்டியாய் கருதியே கணிக்கப்படுகின்றன அவ்வாறான குறிகாட்டிகளை 3 வகைப்படுத்த முடியும்


அமைப்பு ரீதியான குறிகாட்டிகள் (SYSTEMIC INDICATERS)
நெருக்கமானஅண்மித்த குறிகாட்டிகள் (PROXIMATE INDICATERS)
உடனடிக்குறிகாட்டிகள் (IMMEDIATE INDICATERS)

உதாரணமான பெண்கள் பாடசாலைக்கு செல்லும் வீதத்தினை அமைப்பு ரீதியான குறிகாட்டியாய் கருதலாம் இதன் அதிகரிப்பு மற்றும் குறைவு எதிர்காலத்தில் ஏற்படுத்டசாதக்கூடிய விளைவுகளை கருத்திற்கொண்டு உரிய அமைப்புக்கள் உரிய அரசிற்கு வழிகாட்டல்களை மேற்கொள்ள முடியும் அதேவேளை பெண்கள் பாடசாலைக்கு செல்வதை தடுக்கும் செயற்பாடு ஓர் சமூகத்தில் இடம்பெறுமாயின் அதனை நெருக்கமான அல்லது அண்மித்த குறிகாட்டியாய் கருத முடியும் இது தொடர்பாக உடனடியாக உரிய அமைப்புக்களுக்கு அறிவிக்கபட்டதா, நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதை கொண்டு நெருக்கமான குறிகாட்டிகளை அளவிட முடியும் இதே வேளை அதிகரித்த மனித உரிமை மீறல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், பாலின பாகுபாடு என்பவற்றை உடனடிக்குறிகாட்டியாய் கொள்ள முடியும்.


பெண்கள்,சமாதனம்,பாதுகாப்பு சம்பந்தமான 1325வது தீர்மானமானத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கையிலுள்ள சட்ட ஏற்பாடுகள்

•1 2005ம் ஆண்டின் 30ஆம் இலக்க விபச்சாரத்திற்காகப் பெண்களையும் சிறுவர்களையும்
      விலைப்படுத்தலைத் தடுத்தலும் எதிர்த்தலும் மீதான சமவாயச் சட்டம்
விபச்சாரத்திற்காகப் பெண்களையும் சிறுவர்களையும் விலைப்படுத்தலைத் தடுத்தலும் எதிர்த்தலும் மீதான சமவாயத்திற்குப் பயன்கொடுப்பதற்கும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம் போன்றவற்றை இது உள்ளடக்கியுள்ளது.

•2 1996ம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம்,

இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவை தாபித்தலுக்கும் அதன் கடமைகள், உறுப்பினர் தொடர்பான வரையறைகளையும் கொண்ட பாராளுமன்றத்தின் வர்த்தமானி அறிவிப்பாக இது அமைகின்றது.

•3 2006ம் ஆண்டின் 24ஆம் இலக்க பெண்களையும் இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டம்.

1956இல் உருவாக்கப்பட்ட பெண்களையும் இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் தொடர்பான சட்டத்திற்கான திருத்தச் சட்டமாக இது அமைகின்றது.

•4 2006 ம் ஆண்டின் 16ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம்,

பெண் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்தல், வேலைக்கமர்த்துதல், கட்டாய ஊழியம் பெறுதல், அடிமையாக நடாத்துதல், உளவியல் ரீதியான ஊறுகள் போன்றவற்றிற்கான தண்டனைகள் குறித்த சட்டமான இது காணப்படுகின்றது.


முகம்மது மீராசாஹிபு றதீப் அகமட்.